தமிழகத்திற்கு ரூ.6500 கோடி முதலீடு – முதலமைச்சர் பழனிசாமி
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6500 கோடி முதலீடு கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை தொடர்பான கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.மாநில தகவல் குடும்ப தொகுப்பு உருவாக்கப்படும் என்று பேசினார்.