கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கடந்த 10 நாட்களில் 145 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 986 ரூபாய் நன்கொடையாக வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியமான ரூ.110 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306,42,10,558 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த நிதியை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி காரணமாக, இன்று குறைந்த காற்றழுத்த…
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக பிரபல காலமானார். 80 வயதான அவர்…
சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) முதல் பருவமழை தீவிரம் அடைகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில்…
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…