முதல்வர் பழனிசாமி- தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் காலமானார்.
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த தவுசாயம்மாளுக்கு முதல்வர் பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்கிற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சிலும்பாளையத்தில் தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது