சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
சீன அதிபர் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு, வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.