சேலத்தில் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி…!
முதலவர் பழனிசாமி சேலம், வாழப்பாடியில், ஏற்காடு தொகுதி வேட்பாளர் சித்ராவை ஆதரித்து மாலை 5 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையல், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சேலம் வாழப்பாடியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். ஏற்காடு தொகுதி வேட்பாளர் சித்ராவை ஆதரித்து மாலை 5 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.