வீட்டில் இருந்தபடியே தமிழக அரசின் 1100 சேவை -தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
மக்கள் வீட்டில் இருந்தபடியே சேவையை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
தற்போது வெவ்வேறு அரசு துறைகள் தங்களுக்கு என்று தனித்தனியாக துறைவாரியாக குறைதீர் மையங்கள் மற்றும் இணையதளங்களை செயல்படுத்தி வருகின்றனர்.மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் ,மாதாந்திர மனு நீதி நாள் ,விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் உள்ளிட்டவையும்,மாநில அளவில் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலமாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை ஏற்கும் சூழல் ஏற்படுகிறது.ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும் ,மாநில அளவிலும் வழங்கப்பட்டு வருகிறது.எனவே தமிழ்நாடு அரசு துறைகளில் கீழ் செயல்படும் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து குறைகளுக்கு விரைந்து தீர்வு காணும் முறை தேவைப்படுகிறது.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து , தீர்வுகாண ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தை அமைப்பதின் அவசியத்தை உணர்ந்து,முதலமைச்சர் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவித்தார்.அதாவது மக்களின் குறைகளை தெரிவிக்க 1100 என்ற எண்ணை அழைத்து அரசின் சேவையை பெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.இந்நிலையில் மக்கள் வீட்டில் இருந்தபடியே சேவையை பெரும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்கள் தங்களது குறைகளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.