முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி,செல்லூர் ராஜு ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 8 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனவால் உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் திமுக இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘நிவாரணம் வழங்கியதாலே அண்ணன் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்’ என அவரின் தியாகத்தை அடிமை ‘அசிங்க’ கூஜாக்கள் கொச்சைப்படுத்தினர். ஆனால் வீட்டு வாசலைக்கூட தாண்டாத அமைச்சர்கள், அதிமுக MLAக்களை கொரோனா தொற்றிவருகிறது. அந்த வரிசையில் இன்று ஓர் அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் உடல்நலன் தேறி வரவேண்டும் என வாழ்த்தும் அதேசமயம், ‘எல்லோருக்கும் வந்தால்தான் சமூக பரவல்’ என வாய்க்கு வந்ததெல்லாம் அறிவியல் என அவிழ்த்துவிடும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…