முதலமைச்சர் பழனிசாமி -சசிகலா சந்திப்பு எந்த ஜென்மத்திலும் நடக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

தினகரன் அழைப்பு விடுப்பது திமுகவிற்குத்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திடீரென்று ஒரு மாயையை ஏற்படுத்தி ,ஒரு பில்டப் தர வேண்டாம்.பணம் கொடுத்து கூடும் கூட்டமெல்லாம் நிலைத்து நிற்கப்போவதில்லை.அதிமுக மிகப்பெரிய இயக்கம்.கூட்டம் நடைபெறும் போது கட்சியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அண்ணன் -தம்பி பிரச்சினை,இதெல்லாம் ஒற்றுமையில் இருந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.அப்படித்தான் அவர் கூறினார்.அதுக்கு நீங்கள் ஒரு பில்டப் கொடுத்துவிட்டீர்கள்.இது நியாயமா ?..அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை.அவர் கட்சிக்கூட்டத்தில் பேசியுள்ளார்.ஒற்றுமையாக இருக்க வேண்டும்.நாம் அனைவரும் அண்ணன் ,தம்பிகள் .சண்டை வரக்கூடாது ,நம்முடைய பிரதான எதிரியான திமுகவை வேரோடு வேராக வீழ்த்துவது தான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். ஆகவே சிறு சிறு சண்டைகளை விட்டுவிட வேண்டும். இதைத்தான் அமைச்சர் வேலுமணி கூறினார்.

மேலும் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,சசிகலாவும் தினகரனும் ஒன்றிணைவோம் வா என்று திமுக-வை அழைக்கின்றனர்.வேறு யாரையும் அழைக்கவில்லை. எங்களுக்கு பொது எதிரி திமுக. தினகரன் அழைப்பு விடுப்பது திமுகவிற்குத்தான்.எங்களுக்கு இல்லை.

சசிகலா -முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,எந்த ஜென்மத்திலும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்