சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுக நிலைப்பாடு குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.
இதனையடுத்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, நான் ஒரு விவசாயி, இது ஆனால் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர் மு.க.ஸ்டாலின் தான் அதை விவசாயிகள் என்றும் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். அந்த வகையில், சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுக நிலைப்பாடு குறித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ,முதலமைச்சர் இப்பொது இது குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என கூறி முதல்வர் பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…