#BREAKING : எடப்பாடியார் என்றும் முதல்வர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்
எடப்பாடியார் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளகர்ளை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே என்று பதிவிட்டுள்ளார்.
எடப்பாடியார் என்றும் முதல்வர்!
இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம்!
எடப்பாடியாரை முன்னிருத்தி
தளம் அமைப்போம்!
களம் கான்போம்!
வெற்றி கொள்வோம்!
2021-ம் நமதே!— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) August 11, 2020