நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி

கடலூர் மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்த நிலையில்,நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் முதல்வர் பழனிசாமி கடலூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். கடலூர் மாவட்டத்தின் ரெட்டி சாவடியில் நிவர் புயல் பாதிப்புகள் ஏற்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு விவரத்தை கேட்டு அறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும், சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் தேனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். மேலும் முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களையும் வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி.