தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு.!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது. சென்னையில் 300 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்கள் 14 நாளில் மனித உடலில் உருவாக்கும். வெள்ளை அணுக்கள் மனிதர்களில் உடலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட செல்களை அழித்துவிடும். மேலும் 28 நாட்களுக்குள் தோல் எதிர்ப்பு சக்தியையும் மனித உடலில் உருவாக்கிவிடும். இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.