ரேஷன் கடைகளில் போதிய பொருட்களை இருப்பு வைக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

வடகிழக்கு பருவமழைக் காலத்தையொட்டி ரேஷன் கடைகளில் போதிய பொருட்களை இருப்பு வைக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் & மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் .மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மீட்பு குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை வலுப்படுத்த கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கருவிகளுக்காக ரூ.30.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு ரூ.7.25 கோடியும், மீன்வளத்துறைக்கு ரூ.1 கோடியும், மொத்தம் ரூ.38.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025