மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வேலை இன்றி பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில்முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டும் அல்லாமல்,ஏழை ,எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியும்,பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தியும் வருகிறது.
இதன் காரணமாக ,தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலே அதிகமாகவும்,நோய்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.எனவே ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 ரொக்க நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/Hl34yNC0lT
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 16, 2020