தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று 5.10.2020 தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
மேலும், 15 கோடியே 39 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல்துறை கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 1 குடியிருப்பில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், காவல்துறை தலைமைஅலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில செயல்பாட்டு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூக ஊடக மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல் காவல்துறை அலுவலகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…