வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் !சென்னையில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி

வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் .
இதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று ( 28-ஆம் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் செல்கிறார். அங்கிருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி புறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார்.அங்கு கலிபோர்னியாவில் கால்நடை பண்ணை பார்வையிடுகிறார்.
பின்னர் அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில் 8, 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.இறுதியாக 10-ம் தேதி தமிழகம் திரும்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி.இன்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமியை அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.இதனையடுத்து அவர் சென்னையில் இருந்து புறப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025