புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் பழனிசாமி.!

11 துறைகளின் சார்பில் 13,999 பயனாளிகளுக்கு ரூ.85.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்.
தருமபுரியில் ரூ.6,989.79 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். 11 துறைகளின் சார்பில் 13,999 பயனாளிகளுக்கு ரூ.85.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்தார்.
இதில், ரூ.73 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் 18 ஆயிரத்து 589 பேருக்கு ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் ரூ.55.03 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.