ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ராமநாதபுரத்தில் ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் 844 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

இதனையடுத்து 15,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து பேசிய முதல்வர், ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலன் கிடைத்துள்ளது.

நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும். ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.345 கோடியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணி குறித்து
இராமநாதபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் கொண்டார். இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனிசாமி மனைவி வானதிதேவிக்கு அரசு வேலைக்கான ஆணையை இவ்விழாவில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘பிங்க் ஆட்டோ’ திட்டம் : சென்னை பெண்களே விண்ணப்பியுங்கள்..!நவம்பர் 23 தான் கடைசி நாள் …!

‘பிங்க் ஆட்டோ’ திட்டம் : சென்னை பெண்களே விண்ணப்பியுங்கள்..!நவம்பர் 23 தான் கடைசி நாள் …!

சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…

6 hours ago

இந்தியாவில் களமிறங்கியது ‘மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63’..! விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…

7 hours ago

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…

8 hours ago

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…

9 hours ago

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…

9 hours ago

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

10 hours ago