அரசு பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்பு:முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேர்வது குறைந்து வருகிறது. எனவே, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,செங்கோட்டையன்,சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.