கீழடியில் ரூ.12.21 கோடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

Default Image

கீழடியில் ரூ.12.21 கோடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஐந்து கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

 இந்த பணியின் போது எலும்புக்கூடுகள், நாணயம் மணிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் பழந்தமிழரின் புகழை உலகறியச் செய்ய அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர்.

 இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி காணொலிக்காட்சி வாயிலாக ரூ.12.25 கோடி  மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்