ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.ஆனால் அதிமுகவில் அண்மைக்காலங்களாகவே யார் முதல்வர் வேட்பாளர் ? சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான மோதல் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே அதிகரித்து வருகிறது. செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என்று பிரதமர் மோடியே பாராட்டும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…