முதல்வர் பழனிசாமியிடம் பக்குவம் இல்லை., கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.!

Default Image

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பக்குவம் பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜகாந்த், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் திமுதிகவிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 41 தொகுதிகள் ஒதுக்கி, அமோக வெற்றி பெற்று ஆளும் கட்சி, எதிர் கட்சியாக அதிமுக, தேமுதிக இருந்தது.

இப்போது உள்ள முதல்வர் பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி வழியாகத்தான் தேமுதிகவிடம் கூட்டணிக்கு வந்தார்கள். நாங்கள் அதிமுகவிடம் கூட்டணிக்கு செல்லவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காலதாமதமாக தேமதிக்காவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதுவும் நாங்கள் விரும்பாத தொகுதிகள், ஆனால் கடைசி நேரம் என்பதால், அப்போது அதை ஏற்றுக்கொண்டோம்.

ஆனால், அந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது. அந்த நிகழ்வு மீண்டும் வந்துவிட கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முறை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என்றும் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் வலியுறுத்தி இருந்தோம். அன்றைக்கு எல்லாரும் கிண்டல் செய்தார்கள், எதோ கெஞ்சிக்கிறோம் என்றும் கூட கூறினார்கள்.

கடைசி நேரம் வரைக்கும் எத்தனை தொகுதிகல், எந்த தொகுதிகள் என்ற எதுவும் இறுதி ஆகவில்லை. இதனால் வேட்பாளர் அறிவிப்பு, தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் போன்றவை செய்வதற்கு காலம் குறைந்துவிட்டது. இந்தநிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக தான் முன்கூட்டியே அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

ஆனால் தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு பதிலாக மற்ற கட்சிகளை அழைத்து பேசுனார்கள். எங்களை தவிர்த்து, மற்ற கட்சிகளோடு தான் இருந்தார்கள். பக்குவமான அரசியலை ஜெயலலிதா அவர்கள் நீங்கள் விரும்பும் கூட்டணி அமைப்போம் என்று சொல்லி, 41 தொகுதிகளை கொடுத்து வெற்றி கூட்டணியாக மாற்றியது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். அந்த பக்குவம் இப்போதுள்ள முதல்வர் பழனிசாமியிடம் இல்லை என கூறியுள்ளார்.

கடைசில் தேமுதிமுக மீது பழி சுமத்துகிறார்கள். 13 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என கூறினார்கள். எந்த தொகுதிகள் என்று அடையாளம் காட்டவும் மறுத்தார்கள். இறுதியாக 18 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கேட்டோம். பின்னர் நீங்கள் விரும்பும் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வர் கூறியதால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என விளக்கமளித்துள்ளார். வரும் தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக அரசியலில் சரித்திரம் படைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
shreyas iyer and rohit
US President Donald Trump
manoj bharathiraja and bharathiraja
ADMK Leaders meeti Amit shah - Edappadi Palanisamy says
shreyas iyer Shashank Singh
MKStalin