இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார்.
தமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .
ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)
வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
February 8, 2025![ByeElection](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ByeElection.webp)
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)