தொல்லியல் துறை சார்பில் நினைவு சின்னங்களை திறந்து வைத்தார் – முதல்வர் பழனிசாமி

Default Image

தமிழக தலைமைச் செயலகத்தில், இன்று தொல்லியல் துறை சார்பில் 3 கோடியே 51 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நினைவு சின்னங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் 3 கோடியே 51 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள கட்டபொம்மன் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மனோரா நினைவு சின்னம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டச்சுக் கல்லறை ஆகிய மூன்று நினைவு சின்னங்களை திறந்து வைத்தார்கள்.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின்படி, சுற்றுலாத் துறையின் மூலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நினைவு சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டு, இப்பணிகளை மேற்கொள்வதற்காக 24 கோடியே 81 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள கட்டபொம்மன் கோட்டையின் எஞ்சிய பகுதியை புனரமைத்து பாதுகாக்கும் வகையில், 92 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் கோட்டையின் எஞ்சிய பகுதிகளை சுண்ணாம்பு கலவை கொண்டு சீர் செய்யப்பட்டது சுற்றிலும் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதி, பாதுகாவலர் அறை, புல்வெளி தளம், மின் விளக்குகள், வழிக்காட்டு பலகைகள் போன்ற அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list