ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக்கட்டடத்தை திறந்து வைத்தார் – முதல்வர் பழனிசாமி

Published by
கெளதம்

தலைமைச் செயலகத்தில், உள் போக்குவரத்து துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக்கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார் .

இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், உள் போக்குவரத்து  துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப போக்குவரத்து துறை அலுவலக செயலாக்கப் பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் நிறைவேற்றிடவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத் துறை தொடர்பான அன்றாடப் பணிகளை அருகிலேயே உள்ள அலுவலகங்களில் மேற்கொள்ள ஏதுவாகவும், புதிய பகுதி அலுவலகங்களைத் தோற்றுவித்தல், பகுதி அலுவலகத்தினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், தேவையான வசதிகளுடன் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு சீரிய திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2018-2019 ஆம் ஆண்டிற்கான உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இயக்கூர்திகள் சட்டங்கள் மற்றும் நிருவாக மானியக் கோரிக்கையின் போது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்திற்கு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் தேர்வுத் இத்துடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு திண்டுக்கல் சி. சீனிவாசன், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே. பிரபாகர், இ.ஆய், கூடுதல் தலைமைச் செயலாளர் போக்குவரத்து ஆணையர் திரு. தென்காசி க. ஜவஹர், இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

1 hour ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

2 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

2 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

3 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

3 hours ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

4 hours ago