கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தி.மு.க-வின் மக்கள் கிராம சபை கூட்டத்தால் பலனில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கையாக உள்ளது.விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பவானி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று…
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக…
சென்னை : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு…