“முதலமைச்சர் பழனிசாமிக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை” – சீமான்..
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் சில இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னுர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.நேற்று 21 நாளாக போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து பேசினார். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் , என்.பி ஆர்-க்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிகு பிறப்புச் சான்றிதழ் இல்லை என என்னிடம் கூறியுள்ளார். நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் , பிரதமரும் கூட பிறப்புச்சான்றிதழ் இருக்காது. சிஏஏ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது; இந்த சட்டத்தால் ஒட்டுமொத்த மக்களே முகாமுக்கு செல்ல வேண்டிய நிலைமை தான் வரும்.
இந்தியாவிற்கு இனிமேல் அகதியாக வருபவர்களுக்கு குடியுரிமை தர வேண்டாம். ஆனால் இதற்கு முன் வந்தவர்களுக்கு குடியுரிமை தரமாட்டோம் என எனக்கூறுவது பாசிசம் என கூறினார்.