தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை நேற்று தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ரூ.2 கோடி மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட https://tnskill.tn.gov.in என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 19.9.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 2 கோடி ரூபாய் இணையதளத்தை துவக்கி வைத்தார்கள். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், கட்டுமானம் மற்றும் செலவில் மேம்படுத்தப்பட்ட https://www.tnskill.tn.gov.in என்ற உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிடவும், கோர்ஸெரா நிறுவனம், தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுவதுடன் தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள், துறை திறன் குழந்தைகள், மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் ஆகிய திறன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் தற்போது பயன்பாட்டில் உள்ள கழகத்தின் இணையதளம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பன்மொழி திறனாய்வு மற்றும் மின்-ஆளுமை தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அம்மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் https://www.tnskill.tn.gov.in இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இதன்மூலம், பயனாளர்களின் பதிவுகள், பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அங்கீகாரங்கள், மதிப்பீட்டு முகமைகளின் பதிவுகள், பயிற்சி தொடர்பான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள், இணையவழி சான்றிதழ்கள், ஆதார் எண் இணையப்பெற்ற வருகை பதிவேடு பராமரித்தல், பயிற்சி பெற்றவர்களது பணி அமர்த்தல் கண்காணிப்பு இணையவழி பணப்பயன் ஒப்பளிப்பு போன்ற பணிகளை இவ்விணையத்தின் வாயிலாக மேற்கொள்ள இயலும். அத்துடன், ஒருங்கிணைந்த ஒற்றைத் திறன் பதிவு தொகுதியை பயிற்சி வழங்கும் பிற துறைகளின் விவரங்களை உள்ளடக்கியதாக இவ்விணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் திறன்மிகு பணியாளர்களை உருவாக்கிடும் வகையில் சிறப்பாக பயிற்றுவிக்கும் பயிற்றுநர்களுக்கு புதிதாக இந்த ஆண்டு முதல் “கௌசலாச்சாரியா” விருது வழங்கப்படும் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு, சிறப்பாக பயிற்றுவித்தமைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்பத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் திரு. பெ. சுகுமார் அவர்களுக்கு பொறியியல் அல்லாத பிரிவில் மாநில மற்றும் தேசிய அளவிலான “கௌளசலாச்சாரியா விருதும், மதுரை அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் திரு.ம. செவ்வேல் அவர்களுக்கு பொறியியல் பிரிவில் மாநில அளவிலான “கௌசலாச்சாரியா” விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு.பெ. சுகுமார் மற்றும் திரு.ம. செவ்வேல் ஆகியோர் சந்தித்து, கௌசலாச்சாரியா” விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. முகமது நசிமுதீன், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் திரு. வி. விஷ்ணு, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
19.9.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்
துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட https://t.co/qdnT4yWTpq என்ற
இணையதளத்தை துவக்கி வைத்தார்கள் pic.twitter.com/dPh4P5hWx3— DIPR TN (@TNGOVDIPR) September 20, 2020