முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டின் கஜானாவை காலி செய்துவிட்டார் – டிடிவி
முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக தூர்வாரி, சானிடைசர் தெளித்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், தாலுகாபட்டியில் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில், ஆறு, ஏரி, குளத்தை தூர்வாரினாரோ, இல்லையோ, தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக தூர்வாரி, சானிடைசர் தெளித்து வைத்துள்ளார் என விமசித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் ஆட்சியை அமமுக தான் அளிக்கும் என்றும், அதிமுக, திமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுக்க மாட்டார்கள் என்றும், பாஜக தயவால் அதிமுக ஆட்சி தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.