கருணாசுக்கு நோட்டீஸ் கொடுக்க முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை…! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
கருணாசுக்கு நோட்டீஸ் கொடுக்க முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு நோட்டீஸ் கொடுக்க முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவது கண்டனத்திற்குரியது .தமிழகம் அனைத்துத் துறைகளிலும் இழந்துவிட்ட செழிப்பினை மீண்டும் பெற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.