எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 95 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய மனுவில், பேரறிஞர் அண்ணா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்று கோரியுள்ள அவர், முல்லை பெரியாரில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு வழங்கபட்ட முதற்கட்ட அனுமதியை ரத்து செய்ய வெண்டும் என்றும் கேட்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட 6 ஆயிரம் கோடி ரூபாயை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை, முந்திரி விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு, 625 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…