புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் நாளை (நவம்பர் 28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பி சென்றார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில், கனமழை பெய்ததால் ஹெலிகாப்டரில் நாகை, திருவாரூர் செல்ல முடியாததால் திருச்சிக்கு திரும்பினேன். திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் நாளை (நவம்பர் 28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.நாகையில் நாளை காலை 8 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆய்வை தொடங்குகிறார்.பிரதாமபுரம், காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, கோவில்புத்து, வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை, வேதாரண்யம், ஆதனூர், ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…