புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் இன்று (நவம்பர் 28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பி சென்றார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில், கனமழை பெய்ததால் ஹெலிகாப்டரில் நாகை, திருவாரூர் செல்ல முடியாததால் திருச்சிக்கு திரும்பினேன். திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் இன்று (நவம்பர் 28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.நாகையில் இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆய்வை தொடங்குகிறார்.பிரதாமபுரம், காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, கோவில்புத்து, வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை, வேதாரண்யம், ஆதனூர், ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு…