புழல் சிறையில் நிறைய வசதிகள்….!சிறைக்கு செல்லும் முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் …!பகீர் தகவலை கூறிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறைக்கு செல்ல இருப்பதாக முன்னாள்  தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மத்திய புழல் சிறையில் கைதிகள் தனி டிவி , தனி சமையல் அடுப்பு ,தனியான சமையல் உணவு , வசதியான பெட் சீட் , நவீனவிதமான உடைகள் , விலையுயர்ந்த காலணி என ஆடம்பரமான சொகுசு வாழ்கை வாழ்த்துவருகிறார்கள் என்று கண்டுபுடிக்கப்பட்டது.

விதி மீறல் சென்னை மத்திய புழல் சிறையில் தண்டனை உயர் பாதுகாப்பு கொண்ட சிறைக்கைதிகள் அறையில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கொல்கத்தாவில் இருந்து கள்ள நோட்டு , கள்ள தூப்பாக்கி கடத்தல் குற்றவாளிகள், மத தலைவர்கள் மிரட்டல் , கொலை போன்ற வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி இருக்கும் கைதிகள் அறையில் கூட இன்று கைதிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் சர்வசாதாரணமாகிவிட்ட்து.அது மட்டுமில்லாமல் கைதிகள் சிறையிலேயே சில அதிகாரிகளுடன் கூட செலஃபீ எடுத்து பதிவிடுகின்றனர்.இது பற்றி விசாரிக்கும் பொது காய்கறி மூடையில் காய்கறி கொண்டு செல்லும் பொது லஞ்சம் வாங்கிக்கொண்டு சில அதிகாரிகளே இதற்க்கு துணை புரிகிறார்கள் என்று தகவல் வருகின்றது.

Image result for இளங்கோவன்

இந்நிலையில் இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக ஈரோட்டில்  முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், புழல் சிறையில் கைதிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தது போல படங்கள் வெளியானது. அது ஏன் என்றால்? மிக விரைவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறைக்கு செல்ல இருப்பதால் இது போன்ற சலுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று சர்சையாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்