மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.!
நதிநீர் இணைப்பு குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார் .
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் மேலாண்மைக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட காவிரி மற்றும் கோதாவரி நதிநீர் இணைப்பிற்காகவும், குண்டாறு மற்றும் வைகை ஆறுகளை இணைக்கும் திட்டங்களுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் 2021ம் ஆண்டுக்குள் தாமிரபரணி – கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்பதற்கான திட்டம் முடிவடையும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை செயலகத்தில் இருந்து நதிநீர் இணைப்பு குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் , மேலும் அந்த ஆலோசனையில் தமிழகத்தில் நீர் மேலாண்மைக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.