ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு – சேலம் மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை.!

Published by
பாலா கலியமூர்த்தி

மேட்டூர் ஆணை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை.

மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் 8 ஆண்டுகளாக குறுவை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாக உள்ளது.  இதனால் குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைதொடர்ந்து, காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக வரும் ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு வசதியாக அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல வசதியாக ஆறுகள், வாய்க்கால், வடிகால்வாய்களை தூர்வார 67.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தஞ்சாவூர் 22.92 கோடி, திருவாரூர் 22.56 கோடி, நாகை 16.72 கோடி,புதுக்கோட்டை 1.74 கோடி, திருச்சி 1.76 கோடி 20, அரியலூர் 16 லட்சம், கரூர் 1.38 கோடியில் மொத்தம் 392 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, 38 பணிகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று சொந்த ஊரான சேலத்துக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ள மேட்டூர் அணை தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

6 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சு சாம்சன்? காரணம் என்ன?

6 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சு சாம்சன்? காரணம் என்ன?

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…

2 minutes ago

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…

43 minutes ago

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…

1 hour ago

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

12 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

13 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

13 hours ago