#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது ஆகஸ்ட் 31-ஆம் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி மாலை முதலமைச்சர் ஆலோசிக்கிறார்.மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி 29-ஆம் தேதி காலை ஆலோசனை நடத்த உள்ளார்.மேலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படுமா ? என்பது ஆலோசனைக்கு பின்னர் தான் தெரியும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025