நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி.!

சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச்செயலகத்திலிருந்து தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார். மேலும், நாளடைவில் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளார்.