நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல், பல புதிய திட்டங்களை தொடக்கி வைத்தது மட்டுமல்லாமல், அனைத்து துறைகளின் பணியையும் உற்று கவனித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த காவலர்களிடம் அவர் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடம் பின் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பினார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இரவும் பகலும் காவல் காத்து சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்திடும் மகத்தான பணி காவல்துறையினருடையது! அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். வள்ளுவர் வாக்கின்படி முறைசெய்து காப்பாற்றுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…