ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த ஹவில்தார் திருமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமூர்த்தி 173வது படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூலை 26-ம் தேதி அன்று இந்திய எல்லையில் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜூலை 31-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…