புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுனர் குழு அமைத்து முதல்வர் உத்தரவு..!

Published by
லீனா

புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைப்பு.

புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான 13 பேர் கொண்ட குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கல்வி கொள்கையை வடிவமைக்க குழு  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய முதலமைச்சர் குழுவினை அமைத்து, மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

குழுவில் இடம்பெற்றோர் விபரம் 

தலைமை நீதியரசர் திரு.த.முருகேசன் அவர்களும்; இக்குழுவின் தலைவராக மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற மேனாள் உறுப்பினர்களாக பேராசிரியர் திரு. எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்; திரு. இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்; பேராசிரியர் திரு. சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; பேராசிரியர் திரு. இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்; திரு.எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்; திரு விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன். திரு.டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்; திரு.துளசிதாஸ், கல்வியாளர்; முனைவர் திரு.ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்; திரு.இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்; திருமதி.ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

1 hour ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago