“அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சி, டி பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Pongal bonus for government employees

சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2023-2024-ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சி, டி பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023- 2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

மேலும், “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்