திருப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி அவை செயல்பட முடியாமல் திணறி வருகிறது.
திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களை மத்தியில் பேசிய, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஆட்சி முடியப்போகிறது கடைசி நேரத்தில் முதல்வர் கல்வெட்டுகளைதிறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் தொடங்கும் போது நல்ல திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும், ஆட்சி முடிவதற்குள் திட்டங்களை திறந்து வைக்க வேண்டும். ஆனால் முதல்வர் பின்னாடி நடந்து கொண்டு செல்கிறார்.
நான்காண்டு காலம் முதல்வர் எதையும் செய்யாமல் ஆட்சி முடிந்த நேரத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு காரணமான முக்கியமான மாவட்டமான திருப்பூர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி அவை செயல்பட முடியாமல் திணறி வருகிறது.
அதற்கு பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு தான் காரணம். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் ஆகியவற்றால் சிறுகுறு தொழில்கள் முடங்கி விட்டன. பாதிக்கப்பட்ட இந்த தொழில் வர்த்தகர்களை கொரோனா காலத்தில் அழைத்துப் முதல்வர் பேசினாரா..? என கேள்வி எழுப்பினார். முதல்வர் மனதில் மக்களுக்கு இடமில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…