திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவு.!
திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து 39.87 மி.கன அடி இன்று முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.