தமிழக முதலமைச்சருக்கு தலைசிறந்த பொருளாதார நிபுணர் பாராட்டு…!

Published by
Edison

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,உலக வங்கியின்  முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டு.

தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழில் வணக்கம் சொல்லி உரையாற்றினார்.

அந்த உரையில்,”தமிழகத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி  இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன வழங்க பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும்.அதன்படி,

  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
  • நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,
  • ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,
  • மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன்,
  • மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், உள்ளிட்ட 5 பேர் இக்குழுவில் இடம்பெறுவர்”,என தெரிவித்தார்.

இந்நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுஷிக் பாசு அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”இது ஒரு சிறந்த அறிவிப்பு.தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

மேலும்,”இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில்,இந்த 5 பேரின் ஆலோசனைக் கருத்து இருந்தால்,நாட்டின் பொருளாதாரம் எட்டிய உச்சத்திற்கு மீண்டும் திரும்பும்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

பட்ஜெட் 2025 : “தமிழகத்துக்கு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்” – ஜெயக்குமார்

பட்ஜெட் 2025 : “தமிழகத்துக்கு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்” – ஜெயக்குமார்

சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை…

34 minutes ago

பட்ஜெட் 2025 : அரசியல் தலைவர்களின் வரவேற்பும்.., விமர்சனமும்…,

டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு…

1 hour ago

ரஞ்சி கோப்பை : ஃபார்ம் குறித்து விமர்சனங்கள்… விராட் கோலிக்கு ஆதரவாக ராயுடு பதிவு!

டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு…

1 hour ago

பட்ஜெட் 2025 : கல்வி மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்…

டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…

2 hours ago

பட்ஜெட் 2025 : வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு! விவரங்கள் இதோ…

டெல்லி :  2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…

2 hours ago

பட்ஜெட் 2025 : விவசாயிகளுக்கான சிறப்பு அறிவிப்புகள்..!

டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…

3 hours ago