தமிழக முதலமைச்சருக்கு தலைசிறந்த பொருளாதார நிபுணர் பாராட்டு…!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டு.
தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழில் வணக்கம் சொல்லி உரையாற்றினார்.
அந்த உரையில்,”தமிழகத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன வழங்க பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும்.அதன்படி,
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
- நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,
- ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,
- மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன்,
- மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், உள்ளிட்ட 5 பேர் இக்குழுவில் இடம்பெறுவர்”,என தெரிவித்தார்.
இந்நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுஷிக் பாசு அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”இது ஒரு சிறந்த அறிவிப்பு.தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.
மேலும்,”இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில்,இந்த 5 பேரின் ஆலோசனைக் கருத்து இருந்தால்,நாட்டின் பொருளாதாரம் எட்டிய உச்சத்திற்கு மீண்டும் திரும்பும்”,என்று தெரிவித்துள்ளார்.
This is such excellent news. Congratulations @mkstalin If these people also had a say in all-India policymaking, India’s economy would turn around from where it has reached. https://t.co/1TGdop7Id2
— Kaushik Basu (@kaushikcbasu) June 21, 2021