ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .
ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.