இலவச முகக்கவசம் வழங்கும் திட்டதை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிஅக்ரிது வருகிற நிலையில், மக்கள் வெளியே வரும் போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவங்கி வைத்துள்ளார்.
அரசால் வழங்கப்படும் முகக்கவசங்கள் காதுகளில் மாட்டாமல், தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முகக்கவசத்தை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் முகக்கவசங்கள் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…