தலைமைச் செயலகம் வர உத்தரவு ! அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
வருகின்ற 22-ஆம் தேதி அனைத்து அமைச்சர்களும் தலைமைச் செயலகம் வர முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு வரும் 22 ஆம் தேதி அனைத்து அமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அனைத்து அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி பயணத்துக்கு பிறகு ஆலோசனை நடத்தப்படவுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.