மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் ..!
மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான எடப்பாடி, வனவாசி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும் அப்பகுதி மக்கள் பல நாள் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இந்த பகுதிகளில் ஏரிகளின் மட்ட அளவுகள் மேட்டூர் அணையின் மட்ட அளவை விட உயரமான உள்ளது. இதனால் கால்வாய் அமைத்து நீர் கொடுக்கமுடியாது. நீரேற்று திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் கொடுக்கமுடியும்.
மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா, வசிஷ்ட மற்றும் திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளில் இணைப்பதால் 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயன் பெறும்.
இந்நிலையில் 565 கோடி ரூபாய் மதிப்பிலான இந்ததிட்டத்தின் முதல்கட்டமாக சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தின் அருகே இந்த நீரேற்றத்திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.